கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

vaccine russia vaccines 5055665 720x450 1
vaccine russia vaccines 5055665 720x450 1

கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்கு அண்மையில் வழங்கப்பட்டது.

குறிப்பாக முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தடுப்பூசிகளைக் கொண்டுவர உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை அடுத்தகட்ட விவாதங்கள் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது குறித்து பதிலை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், அதிக மக்கள் சனத்தொகை கொண்ட பிரதேசங்கள், கொழும்பில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.