கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல்

IMG 20201229 103842 720x405 1
IMG 20201229 103842 720x405 1

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று (29) காலை 10.30 மணியளவில் புனித திரேசா மண்டபத்தில் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் தோமஸ் இமானுவேல், அருட் தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.