கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் விவசாய நிலங்களிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் முதலைகளால் மக்கள் அச்சம்!

Muthalai 10
Muthalai 10

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் விவசாய நிலங்களிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் முதலைகளால் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கந்தபுரம் மரப்பாலம் பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுவதாகவும், கால்நடைகளை உணவாக்கி கொள்வதாகவும்கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த முதலைகள் தற்போது அப்பாலத்தினை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் செய்கை நிலங்களை நோக்கி நகர்ந்த வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தமது பிரதேசத்தில் காணப்படும் முதலைகளின் தொந்தரவு தொடபில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Muthalai 12
Muthalai 11
Muthalai 10
Muthalai 6
Muthalai 5
Muthalai 4
Muthalai 3
Muthalai 3