சுகாதார நடைமுறையை மீறிய 50 பேருந்துகளின் அனுமதி இரத்து!

dbba3beb db6d9275 dilum amunugama 850x460 acf cropped
dbba3beb db6d9275 dilum amunugama 850x460 acf cropped

சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காத 50 பேருந்துகளின் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை போக்குவரத்துச் சபை சுகாதார நடைமுறை – விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கின்றது. எனினும், தனியார் துறையினரில் 90 சதவீதமானோர் மாத்திரமே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

இந்தநிலையில், விதிமுறைகளைப் பின்பற்றாத 50 இற்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரங்களைத் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளோம். என்றோ ஒருநாள் கொரோனாத் தொற்று இலங்கையை விட்டு நீங்கிய பின்னர்தான் அந்த பேருந்துகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் மீண்டும் வழங்கப்படும்” – என்றார்.