நீர் நிலையில் விழுந்து உயிருக்கு போராடும் யானை!

IMG 20201230 203306

நீர் நிலையில்  தவறி விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் நேற்று மாலை    வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

 
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,  
வவுனியா கண்னாட்டி பெரியகட்டு காட்டு  பகுதியிலுள்ள நீர் நிலையில் அப்பகுதியால் வந்த  யானை ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.

குறித்த யானையின் கால்கள் இயலாத காரணத்தினால்  எழுந்து நடக்கமுடியாமல்  நீர்  நிலையில்  உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் பிரதேசவாசிகள்  அதனை அவதானித்துள்ளனர். 
இதனையடுத்து  பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து  குறித்த நீர் நிலையிலிருந்து யானையினை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.