களனி பாலத்தின் கட்டுமான பணிகள் எதிர்வரும் யூலை மாதம் நிறைவு

download 2
download 2

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய களனி பாலத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் யூலை மாதம் நிறைவடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த கட்டுமானப்பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தீர்மானிக்கப்பட்ட வகையில் அபிவிருத்தி செயற்பாடுகளை எம்மால் செய்வதற்கு இயலுமாகவுள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக மேலும் 5 மாதங்கள் கால எல்லை கோரப்பட்டுள்ளது.

எனினும் இந்த கட்டுமானப்பணிகளுக்கு மேலும் 3 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.