கால நிலையில் திடீர் மாற்றம்!

rain30
rain30

நாட்டின் பல பாகங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.