யாழ் பல்கலையில் மாவீரர் நினைவேந்தலுக்கு தடை

Jaffna
Jaffna

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று 26 .11.2019 மற்றும் நாளை 27.11.2019 ஆகிய தினங்களில் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பட்டிருந்த நிலையில் இத்தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரப்பட்டு வருவது வழமை.

இந்நிலையில் இம்முறையும் கார்த்திகை 27 ஆம் திகதி யான நாளை மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ் பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் நாளையும் எந்த நிகழும் நடத்தப்படக் கூடாது என தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது