25000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்காக வைப்பதை தடுக்க முனைப்பு

IMG 6029
IMG 6029

யாழ்.நல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்காக வைப்பதை தடுக்க யாழ்.பொலிஸாரால் கடும் முனைப்பு காட்டிவருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது என்று தடுத்துள்ளனர்.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள் அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும், அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் அஞ்சலி நிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.