தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து அடுத்த வாரம் தீர்மானம் – ஐ.தே.க.

aac
aac
  1. ஐக்கிய தேசிய கட்சி தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி சீர்திருத்தங்கள் குறித்தும், வெற்றிடமாக உள்ள இடங்களை நிரப்புவது குறித்து முடிவினை எட்ட அடுத்த வாரம் செயற்குழு கூடும் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பொதுச் செயலாளர், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ள நிலையில் இந்த மாதத்தில் புதிய அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தேசிய பட்டியல் ஆசனம் குறித்து தீர்மானிக்க மேலும் காலத்தை எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விடயத்தில் கட்சி பொறுமை காக்க வேண்டும் என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பாக தீர்மானிக்கும் முன் நாடாளுமன்றத்தின் முன்னேற்றங்களை கண்காணிக்க கட்சி விரும்புவதாக ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்தோடு நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றே என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.