கல்முனையில் 436 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

vlcsnap 2021 01 04 15h42m14s746
vlcsnap 2021 01 04 15h42m14s746

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 436 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உலர் உணவுப் பொதிகளை வினியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு வாரங்களுக்கு தேவையான பத்தாயிரம் (10.000) ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் கிராம சேவையாளர்கள் ஊடாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதே வேளை கல்முனை நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள 11 கிராம சேவையாளர் பிரிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு மூன்றரை கோடி ரூபா நிதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. என்று பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார். பிரதேச செயலக மண்டபத்தில் (03) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.