மார்ச் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தால் ஓய்வூதியம் இல்லை

anura priyatharsana yappa
anura priyatharsana yappa

மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இல்லாது போகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (Nov.26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு வகையான காரணங்களுக்காக எதிர்ப்பை வெளியிடுகின்றது.

அதாவது அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியல் இல்லாது செய்யப்படும் என பயப்படுகின்றனர் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தாலும் ஓய்வூதியம் இல்லாது போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நன்றாக சிந்தித்து பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற பதத்தை உபயோகித்து அதற்கு எதிரான ஆட்சியை கடந்த அரசாங்கம் நடத்தியதாக தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியால் நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டதால் மக்கள் ஏகோபித்த தீர்மானத்தை எடுத்து கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியதாகவும் கூறினார்.

கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து அமைக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் தவறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.