வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை

IMG 20210107 WA0020
IMG 20210107 WA0020

வட்டுக்கோட்டை  தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த தொழில்நுட்பக்கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக  தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ,யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறைமா அதிபர், ராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரப் பிரிவினர் கலந்துகொண்டனர்