தூபி இடிப்பிற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்

FB IMG 1610203304082 1024x874 1
FB IMG 1610203304082 1024x874 1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் தூபி இடிப்புச் செயலானது ஒவ்வொருவரின் ஆன்மாவினையின் ஆத்மார்த்தமாகப் பாதித்துள்ளதாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத்த தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவரால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற ஆன்மாவோடு ஒன்றிய நினைவுகளை அழித்தமை கண்டனத்துக்குரிய விடயம். ஏதோ திருடர்கள் போலே இரவோடு இரவாக மக்கள் ஆன்மாக்காளை ஆட்டம் காணச் செய்த செயல் உலகத்தில் இன்னுமோர் ஆறாத வடுவினை  ஏற்படுத்தியுள்ளது.


எம்மினத்தினைத் தொடர்ந்தும் ஒடுக்குகின்ற செயற்பாட்டினையே இவ்வாறான செயல்கள் காட்டுகின்றது. மாபெரும் தேசிய சொத்தாக விளங்கிய பல்கலையிலே இந்நிகழ்வு நடந்தேறியமை ஒவ்வொருவரையும் ஆழமாகப் பாதித்துள்ளது. அதனது உச்சக்கட்ட செயற்பாடாக நேற்று நடந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. நடைபெறும் இவ்வாறான செயல்களை கண்டு அநீதிகளை கண்டு அமைதியாக இருக்கமுடியாதுள்ளது.


உயிர் நீத்த ஆன்மாக்களின் ஆத்ம ரீதியான பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியினை இடித்து வரலாற்று தவறினை  ஏற்படுத்தி நிற்கின்றது. எனவே சம்பவத்திற்கு காரணமானவர்கள் இதற்கான தண்டனைகளை பெற்றே ஆக வேண்டும்  நாம் எக்காலத்திலும் இவ்வாறான ஓர் செயல் இனிவரும் காலங்களில் நடைபெறாது இருக்க வேண்டும் எனின் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவே அதற்காக நீதியின் பக்கம் நீதி வேண்டி அனைவரும் ஒன்றுபடுவோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.