ஹர்த்தாலால் முடங்கியது கிளிநொச்சி !

b5dd915d ccaf 46a0 a287 056e2eb7dca6
b5dd915d ccaf 46a0 a287 056e2eb7dca6

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சியும்
முடங்கியது.

கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.

அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும்  மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.