வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சந்திப்பு

Flood Area Visit Kilinochcchi GA 2 1 1536x691 1
Flood Area Visit Kilinochcchi GA 2 1 1536x691 1

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று (15) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு உணவு அல்லாத உடனடித் தேவைக்குரிய பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது, கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுல்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இரணைமடுக் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறி வருவதால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை, ஐயன்கோவிலடி கிராமத்திற்கான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 10 வரையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முரசுமோட்டையில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிப் பொருட்களே தற்போது வழங்கப்பட்டுள்ளன.