வவுனியாவில் இன்று யாருக்கும் தொற்று இல்லை!

1595510689 corona outbreak 2 1
1595510689 corona outbreak 2 1

வவுனியாவில் பத்து நாட்களின் பின்னர் இன்றையதினம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பூச்சியமாக அமைந்துள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நேற்றுவரை தொற்றாளர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவந்த நிலையில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் எவரும் அடையாளப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.