நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது

202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF
202008210903188952 Reduction of corona test isolated seats to 68 for 47600 SECVPF

நாட்டில் மேலும் 770 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 768 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 02 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 189 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7ஆயிரத்து 700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 688 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது