மருதமுனையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

IMG 20210119 173013
IMG 20210119 173013

மருதமுனை பிரதேசத்தில் மேட்டுவட்டை சகாத் கிராம புதிய குடியேற்ற வீட்டுத்திட்டத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

சமூகசேவை அமைப்பான மருதமுனை சுபைதா பவுண்டேஷன் அமைப்பினால் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. தஹானி ஹார்ட்வெயார் நிறுவனத்தின் உரிமையாளர் அல்-ஹாஜ் ஏ.கே.எம்.நளீர் அவர்களின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற புகையிரத சேவை உத்தியோகத்தர் ஏ.கே.எம் அன்சார், இனாஸ் நளீர் மற்றும் றிஷாத் அமானுல்லாஹ் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இந்த சக்காத் கிராம வீட்டுத்திட்டத்தில் ( 21) வீடுகள் கட்டப்பட்டு சமூகத்தில் மிகவும் வசதி குறைந்தவர்கள் அதேபோன்று புதிதாக இஸ்லாத்தை தழுவிக் கொண்டவர்கள் என அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இங்கு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான குடும்ப பின்னணியை கொண்ட வசதி குறைந்த இந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு கரம் கொடுத்த சுபைதா பவுண்டேசன் நிறுவனத்தினர் அனைவருக்கும் மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்