உதயங்கவுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு

photo
photo

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, ரஷ்யாவின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரி காவல்துறை தலைமையகத்தில் முறையிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கை வந்த உக்ரைன் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுடன் சிகிரியா சென்றுள்ள உதயங்க வீரதுங்க, அங்கு பெரிதும் மதிக்கப்படுகின்ற மற்றும் தொல்பொருள் திணைக்களத்தால் புகைப்படம் எடுக்க வேண்டாம், அதன் மீது நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட இடங்களில் சட்டங்களை மீறி குறித்த குழுவினர் ஈடுபட்டனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை மீறுகின்றவர்களுக்குக் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்கின்றதையும் மயந்த திஸாநாயக்க தனது முறைப்பாட்டுக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவர் காவல்துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவிடம், இது குறித்து விசாரணை செய்யும்படி நேற்று முறைப்பாடு செய்தார்.