இலங்கையைக் கண்காணிக்க புதிய பிரேரணை மிக அவசியம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

Human rights watch 696x429 1
Human rights watch 696x429 1

இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளைத் திசை திருப்புவதற்கான போலியான முயற்சி என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது.

அத்தகைய முயற்சிகளால், திசை திரும்பி விடக்கூடாது என வலியுறுத்தியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது