உயர் அழுத்த மின்சார தூணுடன் லொறி மோதி விபத்து!

IMG 20210124 114054
IMG 20210124 114054

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கனரகவாகனமும்,  உயர் அழுத்த மின்சார தூணும் சேதமடைந்த நிலையில் வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

IMG 20210124 114150


குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
பொலநறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரகவாகனம் வவுனியா புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

IMG 20210124 114241


விபத்தில் கனரக வாகனமும், மின்சாரதூணும்  சேதமடைந்தது. விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்திருந்தமையால் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை
விபத்து தொடர்பாக புளியங்குளம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.