கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியது

Corona Virus mutation d614g
Corona Virus mutation d614g

நாட்டில் மேலும் 737 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச் சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8ஆயிரத்து 543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 683 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.