யாழ் நெடுந்தூர பேருந்து நிலையம் மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு

VideoCapture 20210127 100853
VideoCapture 20210127 100853

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரபாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய,  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

122மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் குறித்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது