கல்முனை மாநகர சபையில் உறுப்பினர் ஒருவரை இடை நிறுத்துவதாக அறிவித்த மாநகர முதல்வர்!

IMG 20200411 085836
IMG 20200411 085836

கல்முனை மாநகர சபையில் 34வது சபை அமர்வு மாநகர சபையின் முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமானறகீப் தலைமையில் இன்று (27.01.2021) நடைபெற்றது.

இன்றைய சபை அமர்வின்போது மாநகரசபையில் நிதிக்குழு, பொது வசதிகள் குழு, சுகாதாரக்குழு, சமூக கல்வி கலை கலாசார குழு என சபை உறுப்பினர்களை கொண்டு புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.

இதன் போது சில உறுப்பினர்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். இன் நிலையில் கல்முனை மாநகர சபையின் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் உறுப்பினர் செல்வராசா கருத்துக்களை தெரிவித்த பொழுது சபையின் ஒழுக்கத்திற்கு முரணாக முதல்வரை நோக்கி கை விரலை நீட்டி சபையில் ஒழுக்கம் இல்லாமல் பேசினார் எனத் தெரிவித்து உறுப்பினர் செல்வா என்பவரை இந்த சபை அமர்வில் இருந்து இடைநிறுத்துவதாகவும், எதிர்வரும் சபையில் அமருவதற்கும் தடை விதிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபையினுடைய அங்கீகாரத்தை பெறாமல் முதல்வர் உறுப்பினர் ஒருவரை வெளியேற்ற முடியாது. என சில உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனை அடுத்து சபை முதல்வர் சபை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து முதல்வர் சபையை விட்டு வெளியேறி செல்லும்போது சபையின் உறுப்பினர்கள் சிலர் பலத்த குரலோடு தமது கருத்துக்களை தெரிவித்தனர். சபா மண்டபத்தை விட்டு வெளியில் வந்த உறுப்பினர்கள் சிலரும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.