தியாகி முத்துக்குமாரின் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று!

VideoCapture 20210129 173305
VideoCapture 20210129 173305

தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

முத்துக்குமார் சென்னையில் வைத்து கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு வல்லாதிக்க இந்திய அரசு துணைபுரிவதை கண்டித்து தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.