பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!

DSC 0633
DSC 0633

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (29) மாலை 5.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்த பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை அவர்கள் மன்னார் நகர பகுதியில் அமைந்துள்ள மடு அன்னையின் திருச் சொரூபத்தில் ஆசி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மன்னாரிற்கு வருகை தந்த பிரதி நிதியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து மன்னார் நகர பகுதியில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம் வரை திறந்த வாகனத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீட பிரதி நிதி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,மன்னார் மறைமாவட்ட மக்கள் ஆகியோர் பவனியாக ஆலயம் நோக்கி சென்றனர்.

மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலி இடம் பெற்றதோடு நற்கருனை ஆசீர்வதமும் இடம் பெற்றது.