வவுனியாவில் தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்

IMG 20210130 WA0008
IMG 20210130 WA0008


வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு இன்றையதினம் (30) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்குமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது. அதனை செலுத்தும் பணிகள் வவுனியா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன், வைத்தியசாலை பணிப்பாளர் காண்டீபன் மற்றும் சுகாதாரவைத்திய அதிகாரிகள் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.