துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது!

kaithu

மீட்டியாகொட-பெலவத்த பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 32 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது