பொடி லெசியின் சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF
201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF

போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சிறைவைக்கப்பட்டுள்ள ‘பொடி லெசியின் ‘ சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்டியாகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெல்வத்த பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்டியாகொட – தெல்வத்த பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் தங்கியிருந்த வீட்டின் கூரைப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மீட்டியாகொட காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.