கிராமத்துக்குள் நுளைந்து தென்னந்தோட்டம் ஒன்றினை அழித்து சேதப்படுத்திய காட்டுயானைகள்!

202006151654265282 Tamil News Elephants Movements aliyar dam Do not go to the bath SECVPF
202006151654265282 Tamil News Elephants Movements aliyar dam Do not go to the bath SECVPF

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்துக்குள் காட்டுயானைகள் நுளைந்து தென்னந்தோட்டம் ஒன்றினை அழித்து சேதப்படுத்தியுள்ளது.

நேற்று (01ம் திகதி) இரவு நான்கு காட்டுயானைகள் இக் கிராமத்துக்குள் ஊடுருவி அங்குள்ள தொன்னந் தோப்பில் இருந்த சுமார் 20 தென்னை மரங்களையும் அழித்து சேதப்படுத்தியுள்ளதுடன் இத் தோப்பினுள் உற்பத்தி செய்யப்பட்ட கச்சான், மிளகாய் போன்ற பயிர்களையும் காலால் மிதித்து துவசம் செய்துள்ளது.

குறித்த பிரதேச மக்களுக்கு காட்டு யானைகளின் அச்சுறுத்தல் புதிதல்ல, மேற்படி விவசாயியின் தென்னந் தோப்பினுள் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சுமார் 56 தென்னைமரங்களை காட்டுயானைகள் அழித்துச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தோளால் தண்ணீர் சுமந்து ஊற்றி பராமரித்து வளர்த்து வந்த தென்னை மரங்களை அழித்துள்ளதாகவும் இங்குள்ள காட்டுயானைகளை அகற்றி பாதுகாப்பு வேலியினை பலப்படுத்தி கிராமங்களுக்குள் யானை உள்வராதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் இங்கு விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.