நாட்டில் இன்றைய தினம் சில மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1
CYCLONE WEATHER RAINS WIND HURRICANE 768x384 1

ழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் அம் பாந் தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங் களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர் பார்க்கப்படுகின்றது என வளி மண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு , ஊவா மாகாணத்திலும் அம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதே சங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.