சீரற்ற காலநிலை – 15,568 பேர் பாதிப்பு!!

claimat
claimat

சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 34 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 4 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 15ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 238 குடும்பங்களை சேர்ந்த 933 பேர் 15 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 731 குடும்பங்களைச் சேர்ந்த, 6050 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 கட்டிடங்கள் பகுதி அளவிலும், 1 வீடு முற்றாகவும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 2 இடைத்தங்கல் முகாம்களில், 35 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 247 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த 138 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் சீரற்றக் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேரும், அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரும், மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 551 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 பேர் சீரற்றக் காலநிலையில் உயிரிழந்திருப்பதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 764 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 287 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 163 வீடுகள் பகுதி அளவிலும், ஒருவீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, லுணுகலை, வெலிமடை, பசறை, ஊவா பறணகம, எல்ல, பண்டாரவளை, ஹாலி-எல உள்ளிட்ட பகுதிகளில் சீரற்றக் காலநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.