ஈ.ம.ஜ.க கோரிக்கு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயரத்ன!

146110934 136583688309833 2583747903082912668 n
146110934 136583688309833 2583747903082912668 n

உள்ளூர் கைத்தறி துணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்திற்கு இன்று காலை சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அங்குள்ள தையல் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி உற்பத்திக்கான பொருட்களை 30 பெண்களுக்கு வழங்கிவைத்து 3 மாத பயிற்சி நெறியையும் ஆரம்பித்துவைத்திருந்தார்.

இதன்போது சார்பில் வேலணை பிரதேசபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் குறித்த பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை பற்றி, கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர சாதகமான பதில் வழங்கியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக யாழ் மாவட்டத்திலுள்ள சுயதொழிலில் ஈடுபடக் கூடிய இளைஞர் யுவதிகளை இணைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதுடன் புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பற்றிக் கைத்தொழில் உற்பத்தியைப் போன்று யாழ் மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படும் குறித்த உள்ளூர் பற்றிக் உற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்து தருமாறும் கோரியதுடன் அதுபோன்று புதிதாகவும் நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தயாசிறி ஜயரத்ன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன் கருதிய யோசனைகள் ஒவ்வொன்றையும் இந்த அரசு குடாநாட்டு மக்களுக்காக செய்துகொடுக்க தயாராக உள்ளது.

அதேபோன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான யோசனைக்கமைவாக யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இதுபோன்ற நிலையங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தான் விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.