புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் பிரோத பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு!

IMG 7050
IMG 7050

காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சிசு ஒன்றை வீட்டில் பிரசுவித்து அந்த சிசு இறந்துள்ளதாக மையவாடியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடுத்ததையடுத்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை (08) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைத்துன்னதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தாயார் கருவுற்றுள்ள நிலையில் கடந்த 2ம் திகதி சிசு ஒன்றை வீட்டில் பிரசுவித்துள்ளார் பின்னர் சிசு இறந்து பிறந்துள்ளதாக அப்பகுதி பள்ளிவாசலுக்கு அறியப்படுத்தி சிசுவின் சடலத்தை பூநொச்சிமுனை மையவாடியில் புதைத்துள்ளனர்.

இதன்பின்னர் சிசுவை பிரசுவித்த தாயார் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையை நாடிய நிலையில் அந்த வைத்தியசாலை வைத்தியர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற தாயாருக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை (08) குறித்த மையவாடியில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் றிஸ்வான் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர்களான வைத்தியர் ஜலப்பெருமா, வைத்தியர் சாமிக்க, வைத்தியர் சிவகாந்தன் ஆகியோர் பார்வையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.