வவுனியா சதொசவில் விலை குறைக்கப்பட்ட சீனி; இரண்டு கிலோ வழங்க தீர்மானம்

sothosa 7
sothosa 7

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் அரசாங்கத்தினால் விலை குறைப்பு செய்யப்பட்ட 27 அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானோர் முண்டியடித்து வருகின்றனர் எனினும் வெள்ளைச் சீனி ஒரு கிலோ 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது வாடிக்கையாளர் ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படுகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,

நேற்றுமுந்தினம் முதல் அரசாங்கத்தினால் குறிப்பிட்ட 27 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொளவதற்கு சதொச விற்பனை நிலையங்களில் அதிகளவானோர் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர் . இவ்வாறு காத்திருந்தும் சீனி இரண்டு கிலோ மட்டுமே விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு சீனிக்கு 99 ரூபா விற்கு விற்பனை செய்யப்படும்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு இரண்டு கிலோ மட்டுமே வழங்கப்படுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .

எனினும் பொருட்கள் கையிருப்புக்களில் இல்லை என்பதால் சில பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சதொச நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்