ரஷ்யா,சீனாவின்கொவிட்-19 தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்-வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6
113254181 66f336fc 03ba 4484 981f efc86fa1e8b6

போதுமான தரவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 மற்றும் சீனாவின் சினோஃபார்ம் ஆகிய கொவிட்-19 தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் வைத்தியசாலையின் சிரேஷ்ட விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சினோஃபார்ம் தடுப்பூசி தொடர்பான தரவுகள் அந்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் மேலதிக விபரங்கள் தேவையாக உள்ளன.

அந்தத் தரவுகளை வெகுவிரைவில் வழங்குமாறு உரிய நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளது.

விபரங்கள் கிடைக்கப்பெற்றதும், ஆய்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் உள்ளதா? என்பதையும் அவதானித்து, இலங்கையில் அவற்றை பயன்படுத்த அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சீனாவினால் இலங்கைக்கு 3 லட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.