இலங்கை அரச நிர்வாகசேவை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்மொழி பேசுவோர் எவரும் இல்லை

2f6424e0 sri lanka logo 850x460 acf cropped
2f6424e0 sri lanka logo 850x460 acf cropped

இலங்கை அரச நிர்வாகசேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் தமிழ்மொழி பேசும் எவரும் உள்ளீர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளில் இந்த பரீட்சைகளில் தமிழ் மொழி பேசுவோரே அதிகளவில் தெரிவாகியிருந்தனர்.

இந்நிலையில், இந்த முறை எவரும் தெரிவாகாதது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நிர்வாகசேவை தரம் 3 இல் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் 2019ஆம் ஆண்டு இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதில் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளதில் 68 பேர் தெரிவாகியுள்ள அனைவருமே சிங்களவர்கள்தான் என்றும் தமிழ் மொழி பேசும் எவரும் அதில் தெரிவானதாக அறிவிக்கப்படவில்லை.

2017 ஆம் நடைபெற்ற இலங்கை நிர்வாகசேவை தரம் 3 இற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 61 பேரில் 1/4 பங்கிற்கு மேற்ப்பட்ட தமிழர்களும் அதில் முதலாவது இரண்டாவது தரத்தில் சித்தியடைந்தவர்களும் தமிழர்களாகவே இருந்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் பல தரப்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.