காதலர் தினத்தை மையப்படுத்தி, மோசடிகள் இடம்பெற்றுவருவதால், அவதானமாக இருக்குமாறு காவற்துறையினர் அறிவிப்பு!

16793y4e happy valentine day pictures
16793y4e happy valentine day pictures

பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை மையப்படுத்தி, பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுவருவதாகவும், அதுதொடர்பாக அவதானமாக இருக்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

காதலர் தினத்தன்று நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதாக தெரிவித்து, நிதிமோசடிகளில் ஈடுபடுகின்ற குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கிடைக்கப்பெறுகின்ற இவ்வாறான நிகழ்வுகளுக்கான அழைப்புகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கட்டணம் செலுத்துதல் மற்றும் கடன் அட்டை விபரங்கள் கோரப்படுதல் போன்ற அழைப்புகளை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பரிசில் பொதிகளை வெற்றிப் பெற்றிருப்பதாக தெரிவித்து கைப்பேசிகளுக்கு அனுப்பப்படுகின்ற குறுந்தகவல்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது