ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க திட்டம்!

434eb46b44a832fec870effd10c34dc3 XL
434eb46b44a832fec870effd10c34dc3 XL

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், பெரும்பாலும் முன்வைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை பிரதியாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக செய்திச் சேவை ஒன்றுக்குஅவர் தெரிவித்தார்.

அறிக்கையின் பிரதிகளை தயார் செய்ததன் பின்னர், விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை அழைத்து, இது குறித்து கலந்துரையாட உள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியதன் அடிப்படையில், அது மிகப்பெரியதாகும்.

எனவே, அதனை பிரதியாக்குவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கக்கூடும்.

இந்த வாரம் அமைச்சரவையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள பத்திரங்களின் எண்ணிக்கை குறைந்தளவானது என்பதனால், அறிக்கை பிரதியாக்கப்பட்டிருந்தால், ஜனாதிபதி அது குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்கு பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.