வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு!

01 10 1
01 10 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் பிரதேச செயலாளர் பிரிவு தோறும் உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

01 14 1

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐம்பது (50) குடும்பங்களுக்கு லயன்ஸ் கழகத்தின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

01 13

லயன்ஸ் கழக மட்டக்களப்பு பிராந்திய தலைவர் திருமதி.பாரதி கெனடி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் 306 சீ2 மாவட்ட ஆளுனர் டாக்டர் ரசிக்க எஸ்.பிரியந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

01 1 2

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், லயன்ஸ் கழக மாவட்ட ஆளுனர் சபை செயலாளர் ஆனந்த விகேனாயக்க, கிண்ணையடி கிராம சேவை அதிகாரி கே.லோபனராஸ், கோறளைப்பற்று வாழைச்சேனை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.சுரேஸ் உட்பட் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

01 4

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளுர் லயன்ஸ் கழகங்களின் பங்களிப்பில் சுமார் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவில் வழங்கப்பட்ட இவ்வுலர் உணவுப் பொதிகள் கிரான், செங்கலடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிவுகளில் தலா 100 குடும்பங்களுக்கும், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர், வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா 50 குடும்பங்களுக்கும், மண்முனைப் வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 150 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதாக லயன்ஸ் கழக மட்டக்களப்பு பிராந்திய தலைவர் திருமதி.பாரதி கெனடி தெரிவித்தார்.

01 12