இலங்கையின் அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட விளையாட்டு மன்னாரில் ஆரம்பித்து வைப்பு!

1 4 1
1 4 1

விளையாட்டுத் துறை அமைச்சினால் இலங்கையின் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட (TEQ BALL)  விளையாட்டு இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

1 5


மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த விளையாட்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் எம்.பீரிஸ் லெம்பேட் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பிரதி நிதியாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

1 4

விருந்தினர்களாக இலங்கை டெக் பந்தாட்ட திட்டமிடல் முகாமையாளர் சிவராஜா கோபிநாத், இலங்கை தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் ரஞ்சித் ஜெயமோகன்,இலங்கை டெக் பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் வைத்திய கலாநிதி கனேசநாதன் , மன்னார் மாவட்ட டெக் பந்தாட்ட இணைப்பாளர் ரி.சிவானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 6

இதன் போது இலங்கை டெக் பந்தாட்ட சம்மேளனத்தினால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான டெக் பந்தாட்ட மேசை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 50 வீரர்கள் நிகழ்வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது