நிவாரணத்தினை நம்பி சென்று ஏமாற்றம் அடைந்தவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்!

FB IMG 1607046538819
FB IMG 1607046538819

கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கியிருந்தார்கள். அப்போது எனது குடும்பத்தின் பதிவு வவுனியா பிரமனாளங்குளத்தில் இருந்தது.

அந்த கிராமத்தில் பாதிரியார் ஒருவர் நிவாரண பொதி வழங்குகின்றார் என தகவல் கிடைத்து நானும் எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றோம்.

 அந்த பொதிகளை பார்த்தபோது பெரிய பொதியாக இருந்தது. அதனால் நானும் மனைவியும் சென்ற மோட்டார் சைக்கிளில் இந்த பொதியை கொண்டு செல்ல முடியாது இருக்கும் என எண்ணிக்கொண்டே நிவாரணம் கிடைக்கும் என அருகில் சென்ற எமக்கு அது கிடைக்கவில்லை. 

பிரமனாளங்குளத்தில் பதிவு இருந்தாலும் வவுனியா நகரில் இருக்கின்றமையால் பொதியை தரமுடியாது என கிராம சேவகர் தெரிவித்துவிட்டார். எனினும் நான் முரண்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைக்கு வந்திருந்தேன்.

ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் அறிந்துகொள்வேன் என தெரிவித்தார்