கல்முனையில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

IMG 20210215 104919
IMG 20210215 104919

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

தனியார் தொலைதொடர்பு நிறுவனம் குறித்த பிரதேச மக்களின் அனுமதி இன்றியும் ,சமூக அமைப்புகளின் அனுமதி இன்றியும் கடந்த மூன்று வார காலமாக மக்களின் எதிப்பை மீறி அமைக்கப்பட்டு வந்த தொலை தொடர்பு கோபுர வேலைப்பாடுகளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  தடுத்து நிறுத்தினார்.

பிரதேச வாசிகள் அல்லாது பிற பிரதேசத்தில் வாழ்கின்றவர்களின் கையொப்பங்களை  வைத்துக்கொண்டு குடியிருப்புக்கு மத்தியில் கோபுரம் அமைக்கும் வேலைப்பாடுகள் ஆரம்பித்துள்ளனர். இதனை தொடர்ந்தே எதிர்ப்புகள் எழ தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன் , குபேரன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.