ஹரிஸ்ணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு ஐந்து வருடம் கழித்தும் நீதி நிலை நிறுத்தப்படவில்லை என உறவினர்கள் கவலை தெரிவிப்பு!

IMG e0c3f034100eeedbe38ce086a9fc0e61 V
IMG e0c3f034100eeedbe38ce086a9fc0e61 V

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

எனினும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு , தண்டனை வழங்கப்படவில்லை . ஒவ்வொரு முறையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றிற்குக்கிடைக்கவில்லை என்ற காரணமே தெரிவிக்கப்பட்டு வருகின்றது . இதனால் உறவினர்களாக நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் . என்று தெரிவித்துள்ளனர் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது ,

பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை இச் செயலைச் செய்த காமவெறி பிடித்த கயவன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை . இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை . இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம் . இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .