உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

201903011403371175 milk products effects SECVPF
201903011403371175 milk products effects SECVPF

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாரியளவான பண்ணைகளை உருவாக்க 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாள் ஒன்றில் ஒரு லட்சம் லீற்றர் பாலினை உற்பத்தி செய்வதற்காக 4,500 கறவை பசுக்களை இறக்குமதி செய்வதற்கு குறித்த பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டில் 40 சதவீத பால் உற்பத்தியே மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், வருடாந்தம் பால்மாவை இறக்குமதி செய்வதற்காக 55 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது.

தற்போதைய தரவுகளுக்கு அமைய கறவை பசு ஒன்றிடம் சுமார் 2.5 லீட்டர் அளவிலான பாலே பெற முடிகின்ற நிலையில் இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் அதனை 5 லீட்டராக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.