கொட்டகலை சுரங்கப்பாதையில் பேருந்து விபத்து

1613630664 bus ac 2
1613630664 bus ac 2

ஹட்டன், தலவாகலை பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப் பாதையினுள் தனியார் பயணிகள் பேருந்தில் இலங்கை போக்குவரத்து பேருந்து மோதுண்டு விபத்துக்குள்ளானது.

தலவாகலையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பேருந்தின் பின்னால் வந்த இ.போ.ச பேருந்து மோதியதில் இன்று (18) காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்

விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் பேருந்து சேதமாகியுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், சாரதிகள் சுரக்கப்பாதையினுள் வாகனங்களை முந்திச்செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.