வவுனியாவில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்ட அபிவிருத்தி குழு தலைவர்

IMG 20210218 100847
IMG 20210218 100847

வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் இன்று (18) நேரில் சென்று பார்வையிட்டார்.

கால்நடைகள் நீர் குடிப்பதற்காகவும் மேய்ச்சல் தரையாகவும் பயன்படுகின்ற குளத்தின் அலைகரை பகுதிகளை தனியார் அத்துமீறி வேலி அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இல்லாது போயுள்ளது.

இதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறிப்பாக வவுனியா பத்தினியார்மகிழங்குளம், ஒயார்சின்னக்குளம், கதிர்காமசின்னக்குளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதன்போது கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விரைவாக தீர்த்துத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தார்.