கொண்டைமடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

FB IMG 1613654481405
FB IMG 1613654481405

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வற்றாப்பளை கொண்டைமடு பகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இன்று குறித்த பகுதிக்கு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சென்று மக்களது குறைகளை கேட்டறிந்து உள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைதீவு வற்றாப்பளை கொண்டமடு விவசாயிகளின் பிரச்சனைகளை கிராம மக்களின் அழைப்பின் பிரகாரம் இன்றைய தினம் நேரில் சென்று தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்

அந்த வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருதயநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

அதாவது முல்லைத்தீவு வற்றாப்பளை கொண்டமடு விவசாயிகளின் வயல் நிலங்கள் வனவள திணைக்களத்தினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளமை .வீதிகள் புணரமைப்பு. நீர்ப்பாசன வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது . நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த பிரச்சனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் முள்ளியவளை கமநல சேவைகள் நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் விவசாயிகள் மற்றும் வற்றாப்பளை மங்களேஸ்வரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் இனைந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.