காவல்துறையினர் வேடத்தில் கொள்ளையர்கள்!

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.